லொட்டரியில் பரிசு வென்றும் உணவு வங்கியை நாடும் நிலையில் பிரித்தானியர்
லொட்டரியில் பரிசு வென்ற நிலையிலும், உணவு வங்கியை நாடும் நிலையில் தான் இருப்பதாக பிரித்தானியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உணவு வங்கியை நாடும் நிலையில் பிரித்தானியர்
இங்கிலாந்திலுள்ள Pensby என்னுமிடத்தில் வாழும் Pete Daly (71), பணி ஓய்வு பெற்றவர்.
Peteக்கு ஜூலை மாதம் லொட்டரில் 582.20 பவுண்டுகள் பரிசு விழுந்தது. 10 நாட்களில் தனக்கு அந்த பரிசுப்பணம் கிடைத்துவிடும் என நம்பிக் காத்திருந்தார் அவர்.
ஆனால், இதுவரை அவருக்கு அந்த பரிசுப்பணம் கிடைக்கவில்லை.
விடயம் என்னவென்றால், தனக்கு அந்தப் பணம் கிடைக்கப்போகிறது என நம்பியதால், தன் கையிலிருந்த பணம் முழுவதையும் தனது வாகன காப்பீட்டுக்காக செலுத்திவிட்டார் Pete.
ஆனால், இதுவரை பரிசுப்பணம் வந்து சேராததால், லொட்டரியில் பரிசு விழுந்தும் உணவு வங்கிகளை நாடும் நிலையில் தான் இருப்பதாக தெரிவிக்கிறார் Pete.
சில நடைமுறை சிக்கல்களால் தங்களால் Peteக்கு உடனடியாக பரிசுத்தொகையை வழங்க இயலவில்லை என்று கூறியுள்ள லொட்டரி நிறுவனம், அவரது பணம் நிச்சயம் அவருக்குக் கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.