ஒற்றை புள்ளி ட்விட்டிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை: சிக்கலில் ஈரானின் சமூக ஊடக பதிவாளர்!
ஈரானில் ஒற்றை புள்ளியை ட்வீட் செய்ததற்காக சமூக ஊடக பயனர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை புள்ளி ட்விட்
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் ட்விட்டிற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானிய சமூக ஊடக பதிவாளர் ஹொசைன் ஷான்ப் ஒரு புள்ளியை மட்டும் கொண்ட ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவானது உச்ச தலைவர் அலி கமேனியின் பதிவை விட அதிக லைக்குகளை பெற்றது.
அத்துடன் பொதுமக்கள் பலரது எதிர்ப்பையும் தூண்டியதால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
12 ஆண்டுகள் சிறை
இதையடுத்து அவருக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்காக 5 ஆண்டுகள், இஸ்லாமிய ஆலயங்களை அவமதித்ததற்காக 4 ஆண்டுகள், தவறான தகவல்களை பரப்பியதற்கு 2 ஆண்டுகள் மேலும் அரசு எதிரான பிரச்சாரத்திற்காக 1 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹொசைன் ஷான்ப் வழக்கறிஞர்கள் தண்டனை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஹொசைன் ஷான்ப் சமூக ஊடக கணக்கு செயலிழக்க செய்யப்பட்டது.