Viral Video: கால்வாயில் குட்டியுடன் சிக்கிய யானை: புத்திசாலித்தனமாக வெளியே வந்தது எப்படி?
நீர்ப்பாசனக் கால்வாயில், மழைபொழிவின்போது, குட்டியுடன் சிக்கிகொண்ட யானையை வனத்துறையினர் புத்திசாலித்தனமாக மீட்ட வீடியோ ஒன்றை ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரல் வீடியோ
ஒரு நீர்ப்பாசனக் கால்வாயில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது. அந்த கால்வாயில் எப்படியோ ஒரு யானை தனது குட்டியுடன் இறங்கி சிக்கிக்கொண்டு மேலே ஏறமுடியாமல் திணறுகிறது.
இதைப் பார்த்த வனத்துறையினர் தூரத்தில் கால்வாயில் மண்ணை நிரப்பி யானையும் அதன் குட்டியும் எளிதாக மேலே ஏறிச்செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த யானையும் அதன் குட்டியும் கால்வாயில் நடந்து சென்று, அந்த மண்மேடு மீது ஏறி பாதுகாப்பாக செல்கின்றன. இதை பார்த்த இணையவாசிகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Today early in the morning hours one calf and its mother were rescued from an irrigation canal near Sapua Dam in Hindol Range by Hindol Range team in coordination with irrigation department.
Together we can. My sincere appreciation of all involved🙏 pic.twitter.com/Xrsg8HhwBW
— Susanta Nanda (@susantananda3) August 31, 2024