;
Athirady Tamil News

ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

0

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

அதன் போது , மறைந்த ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு யாழ் ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வக்குமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈகைச்சுடரினை யாழ் தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் த.வினோஜித் ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.

அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர். சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.