;
Athirady Tamil News

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

0

உலகிலேயே அதிகளவு முதியவர்களை கொண்ட நாடாக விளங்கும் ஜப்பானில்(japan) தனிமையில் வசிக்கும் முதியவர்கள் கவனிக்க எவருமின்றி வீட்டிலேயே உயிரிழந்து கிடப்பதாக துயரமான தகவலொன்று வெளியாகி உள்ளது.

இதன்படி 2024ஆம் ஆண்டில் மட்டும் 40,000 பேர் வீட்டிலேயே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், 4,000 பேர் உயிரிழந்த ஒரு மாதத்துக்கு பிறகும், 130 பேர் உயிரிழந்த ஓராண்டுக்கு பிறகும் சடலமாக வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவில் வயதானவர்களை கொண்ட நாடு
ஐ.நா.வின் தரவுகளின்படி, உலகிலேயே மக்கள் தொகையில் அதிகளவில் வயதானவர்களை கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. இதன்காரணமாக, கவனிக்க ஆளில்லாமல் தனிமையில் வாழும் முதியவர்கள் வீட்டிலேயே உயிரிழக்கும் நிலை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், வீட்டில் தனியாக வசித்து வந்த 37,227 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில், 65 வயதுக்கு அதிகமானோர் மட்டும் 70 சதவிகிதம் பேர். 85 வயதுக்கு அதிகமானோர் 7,498 பேர், 75 முதல் 79 வயதுடையவர்கள் 5,920 பேர், 70 முதல் 74 வயதுடையவர்கள் 5,635 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு பின்னரும் மீட்கப்படும் சடலங்கள்
உயிரிழந்தவர்களில் 40 சதவிகிதம் பேரின் சடலங்கள் மட்டுமே அங்கம்பக்கத்தினர் அளிக்கும் தகவலை தொடர்ந்து, ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 3,939 சடலங்கள் ஒரு மாதத்துக்கு பிறகும், 130 சடலங்கள் அழுகிய நிலையில் ஓராண்டுக்கு பிறகும் மீட்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.