இளவரசி டயானாவுக்காக கண்ணீர் விட்டு கதறிய பொதுமக்கள்: குழப்பமடைந்த இளவரசர் வில்லியம்
இளவரசி டயானா அகால மரணமடைந்தபோது, அவருக்கு சம்பந்தமே இல்லாத பொதுமக்கள் கண்ணீர் விட்டு சத்தமாக கதறியழுததைக் கண்டு தான் குழப்பமடைந்ததாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
டயானாவுக்காக கண்ணீர் விட்டு கதறிய பொதுமக்கள்
1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 31ஆம் திகதி, இளவரசர் வில்லியமுக்கு வெறும் 15 வயதே இருக்கும்போது விபத்தொன்றில் அகால மரணமடைந்தார் அவரது தாயாகிய இளவரசி டயானா.
ஒரு இளவரசர் என்னும் முறையில், டயானாவுக்காக துக்கம் அனுசரிக்கும் பொதுமக்களை சந்திக்க கென்சிங்டன் மாளிகையை விட்டு வெளியே வந்துள்ளார் வில்லியம்.
அப்போது, அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், டயானாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கடலளவுக்கு மலர்களைக் கொண்டு அவர்கள் குவித்திருந்ததையும் கண்டு வியப்பைலாழ்ந்துள்ளார் அவர்.
அத்துடன், அவர்கள் கண்ணீருடன் சத்தமிட்டு கதறியழுததைக் கண்டிருக்கிறார் வில்லியம். சிலர் மயங்கிச் சரிய, சிலர் வில்லியமைக் கண்டதும் ஓவென கதற, பூக்களை அள்ளிச் சொரிய, அப்போது தனக்கு ஒன்றுமே புரியவில்லை என்கிறார் வில்லியம்.
நான் தன் தாய்க்காக அழுகிறேன், ஆனால், யாரோ ஒருவருக்காக இந்த மக்கள் ஏன் இப்படி கதறியழுகிறார்கள் என்று எண்ணி, தனக்கு குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார் அவர்.
இப்போது நினைத்துப்பார்த்தால், தன் தாய் உலகத்துக்கு எவ்வளவு செய்திருக்கிறார், எத்தனை பேருக்கு என்னென்ன செய்திருக்கிறார் என்பது புரிகிறது என்கிறார் இளவரசர் வில்லியம். அதனால்தானே ராஜ குடும்பத்தைப் பிரிந்தபின்னும் டயானாவை உலகம் மக்களின் இளவரசி என அழைக்கிறது!