நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : வஜீர அபேவர்தன
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன (Vajira Abeywardhana) தெரிவித்துள்ளார்.
கொழும்பு (Colombo) பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று (03) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பானது தேர்தலை இலக்கு வைத்த செயற்பாடு அல்ல.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரச துறையைப் பலப்படுத்தியுள்ளார்.
2024 ஜனாதிபதி தேர்தல் சாதி, மதம் சார்ந்த தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதாக அன்றி உலகின் வலுவான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்பதால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.