;
Athirady Tamil News

கொல்லப்பட்ட 129 சிறைக்கைதிகள், 59 பேர் படுகாயம்: கலவரமான சிறைச்சாலை

0

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

தப்பிக்க முயன்ற கைதிகள்
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மகாலா மத்திய சிறைச்சாலையில்(Makala Central Prison) இருந்து தப்பிக்க முயன்ற கைதிகளில் 129 பேர் உயிரிழந்துள்ளனர், 59 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட 129 கைதிகளில் 24 பேர் எச்சரிக்கைக்கு பிறகான துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் தள்ளுதல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை பிரதமர் மற்றும் உள்துறை, பாதுகாப்பு அமைச்சர் Jacquemain Shabani, இந்த சம்பவத்தில் 59 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும், அவர்கள் அரசின் கவனத்திற்கு கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைக்குள் ஏற்பட்ட இந்த கலவரத்தில் சில பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த கட்டிடங்கள்
தப்பிக்க முயன்ற சிறைக் கைதிகள் நிர்வாக கட்டிடம், பதிவேடு கட்டிடம், மருத்துவமனை மற்றும் உணவு கிடங்குகள் ஆகியவற்றை தீ வைத்து சேதப்படுத்தினர்.

இந்த அசம்பாவிதமானது, ஜூலை மாதம் நீதித்துறை அமைச்சர் Mutamba போதிய இடமில்லாத காரணத்தை கருத்தில் கொண்டு மகாலா மத்திய சிறைச்சாலையில் 1,284 கைதிகளை நிபந்தனையின் பெயரில் விடுவிக்க உத்தரவிட்டு இருந்ததை தொடர்ந்து அரங்கேறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.