கடைசி நிமிடத்தில் விமானத்தின் கண்ணாடிகளை துடைத்த விமானி: வைரல் வீடியோவால் உருவான சர்ச்சை!

பாகிஸ்தானில் விமானி ஒருவர் பறப்பதற்கு சற்று முன்னதாக விமானத்தின் கண்ணாடிகளை காக்பிட் ஜன்னல் வழியாக துடைத்த வீடியோ காட்சி பேசு பொருளாக மாறியுள்ளது.
வைரலான வீடியோ
பாகிஸ்தான் SereneAir விமானி ஒருவர் பயணத்திற்கு முன்பு Airbus A330-200 விமானத்தின் கண்ணாடிகளை காக்பிட் ஜன்னலிருந்து தனது கைகளால் சுத்தம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவின் Jeddah நகருக்கு பறக்க இருந்த விமானத்தில் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.
Pilots in Pakistan are Cleaning the glass of Plane
pic.twitter.com/FMkQ8ugI2g— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 2, 2024
காக்பிட் ஜன்னலில் இருந்து விமானி வெளியே சாய்ந்து கைகளால் விமானத்தின் கண்ணாடிகளை துடைத்த காட்சிகள் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், விமானத்தின் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் கேள்வியை எழுப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் விவாதம்
சில பயணிகள் விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானியின் அர்ப்பணியை பாராட்டி வருகின்றனர்.
சிலர் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.