;
Athirady Tamil News

என்றும் இளமையுடன் இருக்க மருந்து… ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு

0

என்றும் இளமையுடன் இருக்க மருந்து ஒன்றை உடனடியாக கண்டுபிடிக்குமாறு ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு
என்றும் இளமையுடன் இருக்க மருந்து ஒன்றை உடனடியாக கண்டுபிடிக்குமாறு புடின் திடீரென உத்தரவிட்டுள்ளதால், ரஷ்ய அறிவியலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அத்துடன், உடலிலுள்ள செல்கள் அழிவதைக் குறைத்தல், நினைவாற்றல் மற்றும் பார்வை, கேட்டல், வாசனை போன்ற உணர்வு பாதிப்புகளை சரி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கவும் அறிவியலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

எதனால் இந்த திடீர் உத்தரவு?

இந்த உத்தரவின் பின்னாலிருப்பவர் புடின் ஆதரவாளரான, ரஷ்ய முன்னணி அணு ஆராய்ச்சி நிலையத்தில் தலைவரான Mikhail Kovalchuk என்பவர் என கருதப்படுகிறது.

புடினுக்கும் அவரது மூத்த அமைச்சர்களுக்கும் வயதாகிக்கொண்டே செல்கிறது. ஆகவே, அவர்கள் அனைவரும் என்றும் இளமையுடன் வாழ்வதற்காக மருந்தொன்றைக் கண்டுபிடிக்குமாறு புடின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், அறிவியலாளரான புடினுடைய மகளான மரியாவும் (Maria Vorontsova, 39), நீண்ட காலம் வாழ்வதற்கான ஆராய்ச்சி ஒன்றில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.