ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும் லுகுமா பழம்.. யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
பொதுவாக நம்மில் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்ட சில பழங்களை அவசியம் அவர்களின் உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.
அந்த வகை பழங்களில் ஒன்று தான் லுகுமா. இந்த பழத்தை ‘இன்காக்களின் தங்கம்’ என்றும் அழைப்பார்கள். பழங்காலம் முதல் இந்த பழம் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
தினமும் லுகுமா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. தென் அமெரிக்காவில் காணப்படும் பழங்களில் இதுவும் ஒன்று.
பார்க்கும் போது வெளிப்புற தோல் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளே இருக்கும் கூழ் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கும். லுகுமா பழம் இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற சுவை கொண்டது.
அதே சமயம், லுகுமா பழத்தில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்-சி போன்ற ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவ்வளவு சிறப்புகொண்ட லுகுமா பழத்தை சாப்பிடுவதால் வேறு என்னென்ன பழங்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
லுகுமா பழத்தை யாரெல்லாம் சாப்பிடலாம்?
1. லுகுமா பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமான அமைப்பில் பிரச்சினையுள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.
2. லுகுமா பழத்தில் அதிக அளவு குடல் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கும். அத்துடன் லுகுமா பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்.
3. ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி2 ஆகியவை நோய்களை எதிர்த்து போராடும் சத்துக்களாகும். இவை அனைத்தும் லுகுமா பழத்தில் அதிகமாகவே உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஆன்லைனில் வாங்கிக் கூட சாப்பிடலாம்.