அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன்
அமெரிக்காவில் ( USA) பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிசூடு விவகாரத்தில் 14 வயது சிறுவன் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜோர்ஜியா (Georgia) மாகாணத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
காலை 9 மணிக்கு நடந்த இச்சம்பவத்தை அடுத்து, 10.30 மணியளவில் நகரின் மொத்த காவல்துறையினரும், தொடர்புடைய அமைப்புகளும் பாடசாலை வளாகத்தில் திரண்டுள்ளனர்.
துப்பாக்கிசூடு
மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பு கருதி அருகே அமைந்துள்ள கால்பந்து அரங்கத்திற்கு மாற்றியுள்ளனர்.
வெளியான தகவலின் அடிப்படையில், இரு மாணவர்களும் இரு ஆசிரியர்களும் துப்பாக்கி குண்டு பாய்ந்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது 14 வயது சிறுவன் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரணடைந்த மாணவன்
Colt Gray என்ற அந்த சிறுவனே காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளான்.
நடந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் தகவல் ஏதும் காவலதுறையினர் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. பாரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தற்போது விசாரணையை முன்னெடுத்துள்ளது.