கமலா ஹாரிஸை ஆதரிக்கும் புடின்! சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்
அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசிற்கு (Kamala Harris) தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வு ஒன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த புடின், “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் (Joe Biden) தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் அவர் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரவை வழங்கினார்.
கமலா ஹாரிஸ்
ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம். கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.
முன்பு ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் (Donal Trump), ரஷ்யாவிற்கு (Russia) எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்திருந்தார்.
கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.