;
Athirady Tamil News

பிரான்சின் புதிய பிரதமரை நியமித்த மேக்ரான்! வரலாற்றில் மிக வயதான நபர்

0

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியரை பிரான்சின் புதிய பிரதமராக ஜனாதிபதி மேக்ரான் நியமித்துள்ளார்.

மைக்கேல் பார்னியர்
2016 – 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73).

பல்வேறு பிரெஞ்சு அரசாங்கங்களில் பாத்திரங்களை வகித்த இவர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) நியமித்துள்ளார்.

இந்த தகவலை பாரிஸில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான Matignonயில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நியமனம் மூலம் வரலாற்றில் 5வது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் பார்னியர் (Michel Barnier) பெறுவார்.

தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மை கட்சியை உருவாக்கத் தவறிய நாடாளுமன்றத் தேர்தல்களால் ஏற்பட்ட கிட்டத்தட்ட இரண்டு மாத அரசியல் முட்டுக்கட்டையைத் தொடர்ந்து இவர் பொறுப்பார்.

எனினும், பார்னியர் உடனடியாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் சத்தியத்தை எதிர்கொள்கிறார். ஏனெனில் அவருக்கு ஜனநாயக சட்டப்பூர்வமான தன்மை இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.