ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான புதிய திட்டம்
காசா போர் நிறுத்தம் மற்றும் எதிர்வரும் நாட்களில் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான புதிய திட்டத்தினை முன்வைப்பதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஷுக்கும் இடையிலான போர் நடவடிக்கையில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகிக்கும் பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினை நிவர்த்திப்பதனை நோக்கமாக கொண்டு இந்த புதிய முன்மொழிவு முன்வைக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காசாவின் பிலடெல்பி (Philadebhi) எல்லைப் பகுதியில் இருந்து படைகளை மீளப்பெற மறுப்பதன் மூலம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக நேற்று மாத்திரம் 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதுடன்,
காசா மீதான இஸ்ரேலின் போர் காரணமாக 40,861 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 94,398 பேர் காயமடைந்துள்ளதாகதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.