வெளிநாட்டவர்களுக்கு சீனா விதித்துள்ள தடை
தமது நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க சீனா(china) தடை விதித்துள்ளது. எனினும் சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறினாலும், தடைக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.
குறைந்து வரும் பிறப்பு விகிதம்
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அங்கு உழைக்கும் தகுதியுடைய இளைஞா்களின் விகிதமும் சரிந்துவருகிறது.
இதன் விளைவாக, மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ‘ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கை கைவிடப்பட்டது.
இந்தச் சூழலில், தங்கள் நாட்டுக் குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீன அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.