;
Athirady Tamil News

தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்க பேராசிரியருக்கு கிடைத்த தொழில்நுட்ப விருது., 1 மில்லியன் யூரோ பரிசு

0

சென்னையில் பிறந்த அமெரிக்க மின் பொறியாளர் பன்த்வல் ஜெயந்த் பாலிகா (Bantval Jayant Baliga) 2024-ஆம் ஆண்டிற்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசை (2024 Millennium Technology Prize) வென்றுள்ளார்.

உலகளாவிய மின்சார மற்றும் பெட்ரோல் பயன்பாட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய அவரது கண்டுபிடிப்பு, இந்தப் பரிசை பெற்றதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த அங்கீகாரத்துடன், அவருக்கு €1 மில்லியன் ரொக்கம் ( இலங்கை பணமதிப்பில் ரூ.33 கோடி) வழங்கப்படுகிறது.

பன்த்வல் ஜெயந்த் பாலிகா, அமெரிக்காவின் வடக்குக் கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.

அவர், இன்சுலேட்டெட் கேட் பைபோலார் டிரான்ஸிஸ்டர் (IGBT) என்ற semiconductor மின் சுவிட்சை கண்டுபிடித்ததற்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக Air Conditioner, Fridge , எரிபொருள் மற்றும் மின்சார கார்கள் போன்ற சாதனங்களில் முக்கியப் பங்காற்றுகிறது.

1980களில் உருவாக்கப்பட்ட IGBT கடந்த 30 ஆண்டுகளில் உலகளாவிய கார்பன் டைஆக்ஸைடு (CO2) வெளியீட்டில் 82 கிகாடன் (180 டிரில்லியன் பவுண்ட்ஸ்) குறைப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வளவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்காக இந்த விருது கிடைத்ததாக பாலிகா குறிப்பிட்டார்.

IIT Madras-ல் தனது மின் பொறியியல் படிப்பை முடித்த பாலிகா, பின்பு 1969-இல் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து, Rensselaer Polytechnic Institute-இல் தனது முதுநிலை மற்றும் டாக்டரேட் படிப்புகளை முடித்தார்.

IGBT கண்டுபிடிப்பு, உலகளாவிய அளவில் மின்சார சாதனங்கள் மற்றும் எண்ணெய் செலவை குறைப்பதில் மாபெரும் நன்மையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிகா, மில்லினியம் டெக்னாலஜி பரிசை வென்று, உலகளாவிய இணையத்தை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ்-லீ போன்ற பரிசு பெற்ற பல அறிஞர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.