;
Athirady Tamil News

ரணில் அனுர டீல் அம்பலம் !

0

அனுர குமார திஸாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இருப்பதாக எமக்கு தெரிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவால் (Sajith Premadasa) அனுர குமார திஸாநாயக்கவை தோற்கடிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அனுரவும் மற்றும் ரணிலும் ஒன்றாக இருந்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது நன்றாக புலப்படுகின்றது.

சஜித்தால் அனுரவை தோற்கடிக்க முடியாது என ரணில் கூறுவாக இருந்தால் ரணிலால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவருக்கே தெரிந்து இருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.