கல்வி இராஜாங்க அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு !
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரினால் (Arvind Kumar) 1987 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்டிருந்த லிந்துலை ஹென்ஃபோல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்றை தோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை நுவரெலியா (Nuwara Eliya) நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (05) பிறப்பித்துள்ளது.
1987 ஆம் ஆண்டு குறித்த பெருந்தோட்டத்தில் எழுதுவினைஞராக பணிபுரிந்த போது அரவிந்தகுமாருக்கு உத்தியோகபூர்வ இல்லமாக லிந்துலை ஹென்ஃபோல்ட் தோட்டத்திலுள்ள வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நீதிமன்றம்
எவ்வாறாயினும், பெருந்தோட்டத்தில் இருந்து வெளியேறிய பின்னரும் அவர் சட்டவிரோதமாக வீட்டை ஆக்கிரமித்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, நேற்று (05) நுவரெலியா நீதிமன்றம் தமது தீர்ப்பை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.