;
Athirady Tamil News

பள்ளியில் நடந்த ஆன்மீக போதனை; கொதித்தெழுந்த நெட்டிசன்கள் – தமிழக அரசு எச்சரிக்கை!

0

பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆன்மீக போதனை
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். ‘தன்னை உணர்ந்த தருணங்கள்’ என்ற தலைப்பில் அவர் பேசியது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்கள்தான் என கூறப்படுகிறது.

உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசியுள்ளார்.

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது. மறுபிறவி குறித்து பேசுவது; ஆன்மீகம் குறித்து பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை வெடித்தது.

தமிழக அரசு
இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறையினுடைய உயரதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கு இது பற்றி தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா?

அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத;

உரிய அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளியில்

ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.