அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கணிப்பு: வெல்லப்போவது யார்!
அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Election) வெற்றிபெறுவார் என கணிப்பொன்று வெளியாகியுள்ளது.
தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பேராசிரியர் ஒருவர் தான், இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க பல்கலை பேராசிரியரான ஆலன் லிக்மேன் என்பவர், ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து துல்லியமாக கணிப்பதால், ஜனாதிபதி தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என்றே அழைக்கப்படுகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
இவர், 1984ஆம் ஆண்டு, ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கணித்தது முதல், தொடர்ச்சியாக அவர் தேர்தல் முடிவுகளை சரியாக கணித்துவருகிறார்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
13 காரணிகளின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என கணிக்கும் ஆலன் கூறியுள்ளார்.
இம்முறை, நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் வெற்றிபெறுவார் என கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Please take a few minutes and listen to @AllanLichtman as he picks the winners of the nine presidential elections. He developed a system called the Thirteen Keys to the White House.
He is saying Kamala Harris has all thirteen keys to win.#DemVoice1 #DemsUnited pic.twitter.com/d4sPYBnNeM— Izzy Ⓜ️Ⓜ️ 🇺🇸🦅 (@1zzyzyx1) July 31, 2024