கனடாவில் அதிகரித்துள்ள வாடகை மோசடிகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடா (Canada) முழுவதிலும் இணைய வழியிலான வாடகை மோசடிகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மோசடி தவிர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் இவ்வாறான 51 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, வாடகைக்கு விடுவதாக போலியாக சிலர் விளம்பரம் செய்து மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை மோசடிகள்
இவ்வாறு மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு வாய்மொழி மூலம் இனக்கப்பாடுகளுக்கு இணங்க கூடாது எனவும் ஆவண ரீதியான இணக்கப்பாடுகள் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விளம்பரம் செய்யப்படும் வீடு காலியானதா அது வாடகைக்கு விடப்படுகின்றதா என்பதை அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.