தவெக முதல் மாநாடு.. குழந்தைகளுக்கு அனுமதி இல்லை ? வெளியான முக்கிய தகவல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தவெக கட்சி
நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கு அனுமதி வழங்கக்கோரி தவெக கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கடந்த மாதம் 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்திருந்தார்.
இந்த நிலையில்,கடந்த 2-ஆம் தேதி மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தமிழக வெற்றிக்கழகத்தினுக்குக் காவல் துறையினர் சார்பில் கடிதம் வழங்கியிருந்தனர்.
அதன்படி நேற்று கட்சியின் பொதுச்செயலாளர், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சுரேஷை நேரில் சந்தித்து 21 கேள்விகளுக்குப் பதிலை எழுத்துப்பூர்வமாக வழங்கினார்.இந்தச் சூழலில் தற்பொழுது தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் மாநாடு
மாநாட்டில் 30,000 ஆண்களுக்கு இருக்கைகளும் 15,000 பெண்களுக்கும், 5,000 முதியவர்களுக்கும் இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகக் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு இருக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்கான அனுமதி இன்னும் 2 தினங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.