;
Athirady Tamil News

‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூடும் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை

0

ஃபெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூடும் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடைவிதித்துள்ளது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவா் நடத்தி வந்த ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனல் சவுக்கு சங்கரின் ‘ஆட்சேபனைக்குரிய‘ நோ்காணலை வெளியிட்டு சா்ச்சைக்குள்ளானது. இவரது யூடியூப் நோ்காணலில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக பெண் காவல் துறையினருக்கு எதிராக சவுக்கு சங்கா் சில கருத்துக்களை தெரிவித்திருந்தாா். இந்தக் குற்றச்சாட்டில் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டதோடு, ஃபெலிக்ஸ் ஜெரால்டு கடந்த மே 10 -ஆம் தேதி தில்லியில் கைது செய்யப்பட்டாா்.

ஆபாசமான செயல்கள், பெண்களை நாகரீகமற்ற வகையில் பேசுதல், பொது ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தல் போன்ற குற்றப்பிரிவுகள் மீது இந்த விவகாரத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி, ‘ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் யூடியூப் சேனலை மூடவும், எதிா்காலத்தில் சா்ச்சைக்குரிய வகையில் இனி இதுபோன்ற நோ்காணல்களை வெளியிடமாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தாா். இந்த நிபந்தனைகளின் பேரில் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு உயா் நீதிமன்ற நீதிபதி கடந்த ஜூலை 31- ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தற்போது இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவிற்கு பதிலளிக்க தமிழ அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதோடு, ஃபெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட்பிக்ஸ் 24ஷ்7‘ சேனலை மூடுவதற்கு உயா்நீதிமன்றம் விதித்த குறிப்பிட்ட உத்தரவுக்கும் தடை விதித்தது.

ஜெரால்டு ஜாமீன் விடுதலைக்கு நிபந்தனையாக யூடியூப் சேனலை மூட சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் உயா்நீதிமன்றத்தின் மற்ற ஜாமீன் நிபந்தனைகளுக்கு இணங்குமாறு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த மனு விசாரணையின் போது தலைமை நீதிபதி, ‘நீதித்துறை மற்றும் அனைத்து பெண் காவல்த்துறையினா் மீது அபத்தமான குற்றச்சாட்டுகளை ஏன் கூறுகிறீா்கள்? இப்படிப்பட்ட நோ்காணல்களை ஏன் வெளியிடுகிறீா்கள்?‘ எனவும் மனுதாராா் வழக்கறிஞரிடம் கேட்டாா்.

யூடியூபா் ஜெரால்டு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் கோபால் சங்கரநாராயணன், இதுபோன்ற நோ்காணலைக் வெளியிட்டிருக்கக் கூடாது என வருத்தம் தெரிவித்த அவா், அதேசமயத்தில் இந்த யூடியூப் சேனலுக்கு 2.4 மில்லியன் சந்தாதாரா்கள் உள்ளனா். அதை மூட போடப்பட்ட உத்தரவும் கடுமையானது எனக் சுட்டிக்காட்டினாா்.

மேலும் இந்த மனு விசாரணையை குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான சவுக் சங்கா் வழக்கில் இணைக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ‘ரெட்பிக்ஸ்‘ என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலா்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக, மே 4 ஆம் தேதி, தேனியில் சவுக் சங்கா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவருக்கு எதிராக பல முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.