மரண தண்டனை விதிக்கப்படலாம்…. பாடசாலையில் கொலை செய்த சிறுவனிடம் நீதிபதி திட்டவட்டம்
பாடசாலை ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்து மாணவர்கள் உட்பட நால்வரை கொலை செய்த சிறுவனிடம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை உறுதி என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் Apalachee என்ற பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்து மாணவர்கள் உட்பட நால்வரை கொலை செய்த விவகாரத்தில் 14 வயதான Colt Gray வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டுள்ளான்.
சிறுவன் மீது நான்கு கொலை வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் மரண தண்டனை விதிக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதி விளக்கமளித்துள்ளார். கொல்லப்பட்ட நால்வரில் இருவர் 14 வயதேயான மாணவர்கள் Mason Schermerhorn மற்றும் Christian Angulo என்றும் ஆசிரியர்களான Richard Aspinwall மற்றும் Christina Irimie ஆகியோர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மொத்தமாக 180 ஆண்டுகள்
அத்துடன் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை விவகாரம் நடந்த அடுத்த நாள், தாக்குதல் நடத்திய சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கி பரிசளித்த தந்தை மீது கொலை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
54 வயதான அந்த நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவர் மொத்தமாக 180 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.