சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே… பொலிஸ் விசாரணையில் 11 வயது சிறுவன்
அடிப்படைவாதிகளால் தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 11 வயது சிறுவனிடம் சுவிஸ் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன ரீதியாக
சுவிட்சர்லாந்திலேயே இப்படியான ஒரு வழக்கில் சிக்கும் மிகவும் இளம் வயது நபர் குறித்த சிறுவன் என்றே கூறப்படுகிறது. மேலும், தெற்கு சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மாகாணத்தில் உள்ள பொலிசார் கடந்த ஜூன் மாதம் தொடர்புடைய சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளர்.
சமூக ஊடக பக்கத்தில் இன ரீதியாக மற்றும் பாரபட்சமான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள மத அடிப்படைவாத குழுக்களில் செயல்படுபவர்களுடன் தொடர்புள்ளதாகவும் சிறுவன் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் எந்த அமைப்பு அது என விசாரணையின் போது நீதிமன்றம் கண்டறியவில்லை என்றும் கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்து வரலாற்றில் இதுவரை 14 வயதுக்கு உட்பட்ட எவரும் அடிப்படைவாதிகள் தொடர்பான வழக்கில் ஈடுபட்டதில்லை என்றே கூறுகின்றனர்.
எந்த நாட்டவர்
தற்போது வாலிஸ் மாகாண அதிகாரிகள் தொடர்புடைய சிறுவன் மீது சிறார்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொடர்புடைய சிறுவன் எந்த நாட்டவர் என்பதை அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை.
சிறுவன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரையில் அப்பாவி என்றே கருதப்படுவார் என சிறார்களுக்கான நீதிமன்றம் அழுத்தமாக தெரிவித்துள்ளது.