பிரித்தானியாவின் மன்னராக இப்போதே தயாராகி வரும் இளவரசர்… வில்லியம் இல்லை
பிரித்தானிய இளவரசர் ஒருவர், பிரித்தானியாவின் மன்னராக ஆவதற்காக, அவரை இப்போதே அவரது பெற்றோர் தயாராக்கிவருகிறார்கள்.
இந்த செய்தி இளவரசர் வில்லியமைக் குறித்தது அல்ல!
தயாராகி வரும் இளவரசர்
குட்டி இளவரசர் ஜார்ஜை, பிரித்தானியாவின் மன்னராக ஆவதற்காக அவரது பெற்றோர் இப்போதே தயாராக்கிவருகிறார்கள்.
இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரின் மூத்த மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ், அரியணையேறும் வரிசையில் இரண்டாவதாக உள்ளார்.
தனது தந்தை வில்லியமுக்கு அடுத்தபடியாக மன்னராக பதவியேற்பார் ஜார்ஜ். அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது என்றாலும், ஜார்ஜின் தாயாகிய இளவரசி கேட், மகன் பின்னாட்களில் ஏற்க இருக்கும் பொறுப்புகளுக்கு இப்போதே அவரை தயாராக்கிவருகிறார்.
மன்னருடைய பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படும் Trooping the Colour நிகழ்ச்சி, பதவியேற்பு விழா, முக்கிய அரசு நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு இப்போதே அழைத்துச் செல்லப்படுகிறார் ஜார்ஜ்.
அதே நேரத்தில், வில்லியம் ஜார்ஜை கால்பந்து போட்டிகளுக்கும், கேட், டென்னிஸ் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள்.
அதாவது, மன்னராக பொறுப்பேற்க தயாராகும் அதே நேரத்தில், சாதாரண மக்களையும் ஜார்ஜ் புரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள் வில்லியம் கேட் தம்பதியர்.
ஜார்ஜ் மட்டுமல்ல, தங்கள் மற்ற இரண்டு பிள்ளைகளான சார்லட் மற்றும் லூயிஸும் கூட, சொகுசு வாழ்க்கை வாழாமல், முடிந்தவரை சாதாரண மக்களைப்போல வளர்க்கப்படவேண்டும் என்பதிலும் வில்லியம் கேட் தம்பதியர் கவனம் செலுத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.