பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
வாடகை வீடுகளில் குடியிருப்போர், தாங்கள் எப்போது வேண்டுமானாலும் வீட்டைக் காலி செய்ய நேரிடலாம் என்ற அச்சத்திலேயே வாழ்வது, நம் நாடுகளில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் காணப்படுகிறது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, வீட்டின் உரிமையாளர் எந்த காரணமும் சொல்லாமலேயே, தன் வீட்டில் குடியிருப்பவர்களை இரண்டு மாதத்தில் வீட்டைக் காலி செய்யச் சொல்ல அனுமதிக்கும் வகையில் விதி உள்ளது.
ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
இந்த விதியை நீக்கப்போவதாக தேர்தல் பிரச்சாரங்களில் முழக்கமிட்டாலும், முந்தைய அரசு அதை செய்வதை தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றது.
ஆனால், கெய்ர் ஸ்டார்மர் அரசு, அந்த விதிக்கு விரைவில் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
அதாவது, அந்த விதி சட்டமாக்கப்பட்டதும், இனி வீட்டு உரிமையாளர்கள் எந்தக் காரணமும் சொல்லாமலே தங்கள் வீட்டில் இருப்பவர்களை வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியாது.
இந்த சட்டம் தொடர்பான மசோதா, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.