;
Athirady Tamil News

சீன குழந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க தடை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

0

உள்ளூர் சீன குழந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது.

குழந்தைகளை தத்தெடுக்க தடை
உள்ளூர் குழந்தைகளை இனி வெளிநாட்டவர்கள் தத்தெடுப்பதற்கு சீன அரசு தடை விதித்துள்ளது.

ஆனால் இரத்த உறவினர்கள் அவர்களுடைய உறவினர் குழந்தைகளை தத்தெடுக்கும் விஷயங்களில் விதிவிலக்கு அளித்துள்ளது.

புள்ளி விவரங்களின் படி, உலக அளவில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை அனுப்பும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது.

கிட்டத்தட்ட 82,674 குழந்தைகள் அமெரிக்க குடிமக்களால் மட்டும் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தகவல்

இது தொடர்பாக மாநாட்டில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், இனி வெளிநாட்டவர்கள் சீன குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விஷயத்தில் எந்தவொரு சர்வதேச மரபுகளையும் மீறவில்லை என்றும் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.