சுவிஸ் சுற்றுலா சென்ற 2,200 சுற்றுலாப்பயணிகள்: மண் சரிவால் ஏற்பட்ட சிக்கல்
சுவிஸ் ரிசார்ட் ஒன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால், கீழே வரமுடியாமல் சிக்கிக்கொண்டார்கள் சுற்றுலாப்பயணிகள் 2,200 பேர்.
மண் சரிவால் ஏற்பட்ட சிக்கல்
சுவிட்சர்லாந்தின் Valais பகுதியிலுள்ள Saas Fee resort என்னும் சுற்றுலாத்தலத்துக்கு சுமார் 2,200 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தார்கள்.
அதற்கு முந்தைய தினங்களில் பலத்த மழை பெய்திருந்தது. அதைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டதால், சாலைகளை மண் மூடியதுடன், சாலைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
அதனால், ரிசார்ட்டுக்கு சென்றிருந்தவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டார்கள்.
நேற்று, வெள்ளிக்கிழமை, அவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் மலையிலிருந்து கீழே கொண்டுவரப்பட்டார்கள்.
இந்நிலையில், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், அடுத்த வாரம் வரை பயன்பாட்டுக்கு வராது என கருதப்படுகிறது.