ராஜபக்ச குழாமை விரட்டியடிக்க ரணில் தீர்மானம்
மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சக்கள் முகாமில் உள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
இதன்பிரகாரம் அரசின் எந்தவொரு வேலைத்திட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
27 எம்.பிக்கள்
நாமல் ராஜபக்ச பக்கம் நிற்கும் 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளை ஜனாதிபதி பறித்துள்ளார்.
ஏனைய நால்வரின் பதவிகளும் விரைவில் பறிக்கப்படவுள்ளது. இந்நிலையிலேயே ராஜபக்ச முகாமில் உள்ள சி.பி. ரத்னாயக்க, சஞ்ஜீவ எதிரிமான்ன, சாகர காரியவசம், ஷசீந்திர ராஜபக்ச, நிபுன ரணவக்க உட்பட 27 எம்.பிக்களை அரசிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.