ஆசிய நாட்டில் போப் பிரான்சிஸைக் கொல்ல சதி… அம்பலமான பகீர் சம்பவம்: சிக்கிய பலர்
ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸைக் கொல்ல பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்கும் பகீர் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தகவலை அடுத்தே நடவடிக்கை
குறித்த சதிச் செயலை இந்தோனேசிய பொலிசார் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புடைய 7 பேர்கள் கைதாகியுள்ளதாகவும், பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல ஆசிய-பசிபிக் நாடுகளில் 11 நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக போப் பிரான்சிஸ் வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் சந்திப்புகளை மேற்கொண்டார். உள்ளூர் பட்திரிகைகளில் வெளியான தகவல்களில்,
கைதாகியுள்ள சந்தேக நபர்களில் ஒருவரது குடியிருப்பை சோதனையிட்டதில், அம்பும் வில்லும், ட்ரோன் விமானம் மற்றும் ஐ.எஸ் அமைப்பின் நூல்கள் சிலவும் பொலிசார் கண்டெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கோபத்திற்கு இன்னொரு காரணம்
போப் தனது பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதிக்கு சென்றதால் அந்த ஏழு பேர்களும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி போப் வருகையின் நேரலை வேளையில், மசூதிகளில் தொழுகைக்கான அழைப்பு ஒலிபரப்பை அரசாங்கம் முடக்கியதும் அவர்கள் கோபத்திற்கு இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. 7 பேர்களும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.