;
Athirady Tamil News

விடுப்பு இல்லாமல் 103 நாட்கள் தொடர் வேலை.., உறுப்பு செயலிழந்து உயிரிழந்த ஊழியர்

0

சீனாவில் விடுப்பு இல்லாமல் 103 நாட்கள் தொடர்ந்து வேலைக்கு சென்ற ஊழியர் உடல் உறுப்பு செயலிழந்து உயிரிந்துள்ளார்.

உயிரிழந்த ஊழியர்
கிழக்கு சீனாவில் ஜென்ஜியாங் மாகாணத்தில் உள்ள சோசவுன் பகுதியில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் 30 வயதான அபாவ்(A’bao) என்று நபர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் பெயிண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அந்தவகையில், இவர் இந்த வருடம் பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை தொடர்ந்து 103 நாட்கள் வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 ஆம் திகதி முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபாவ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஜூன் 1 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

நிறுவனத்தின் மீது வழக்கு
அபாவ் உயிரிழந்ததிற்கு, தொடர்ச்சியாக வேலை வாங்கிய நிறுவனமே காரணம் என்று அவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அபாவின் உயிரிழப்பிற்கு நிறுவனமும் 20% காரணம் என்பதால் நீதிமன்றம் அவரின் குடும்பத்திற்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10,000 யென்கள் உட்பட மொத்தம் 400,000 யென்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,000 லட்சம் வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.