;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் விபத்தில் சிக்கி பற்றி எரிந்தது எரிபொருள் தாங்கி : பலர் கருகி மாண்டனர்

0

நைஜீரியாவின்(nigeria) மத்திய மாநிலமான நைஜரில், பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது எரிபொருள் தாங்கி மோதியதில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(08) உள்ளூர் நேரப்படி (01:30 GMT) சுமார் 00:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், வெடிவிபத்து இரண்டு வாகனங்களையும் நாசமாக்கியதாகவும் நைஜர் மாநில அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் கூறியது.

மேலும் சில வாகனங்களும் வெடிப்பில் சிக்கின
நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் அப்துல்லாஹி பாபா-ஆரா, நிலைமையை கண்காணிக்க பதில் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறினார். மேலும் சில வாகனங்களும் வெடிப்பில் சிக்கின.

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து சாம்பலானது மற்றும் இறந்த கால்நடைகள் பலவற்றைக் காட்டுகிறது.

வாகனத்திற்குள் இன்னும் இறந்த உடல்கள்
சம்பவத்திற்குப் பிறகு ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவசரகால மீட்புப் பணியாளர், உடல்கள் மற்றும் வாகனத்திற்குள் இன்னும் இறந்த விலங்குகளை மீட்க பணிபுரிந்து வருவதாகக் கூறினார்.

உயிரிழந்தவர்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்படுவதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெளியிட்ட இரங்கல் செய்தியில் ஆளுநர் உமாரு பாகோ, “துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனை அடைந்தேன்” என்றார்.

நைஜீரியாவில் சாலைகளின் மோசமான நிலை காரணமாக எரிபொருள் தாங்கி வெடிப்புகள் மற்றும் விபத்துக்கள் சாதாரணமானவை என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.