இந்தியாவில் கொடூரம் : மாணவியை வீதியில் தர தரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு
மாணவியின் கைபேசியை பறிக்க அவரை மோட்டார் சைக்கிளில் தர தரவென இழுத்துச் சென்ற கொடூரம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவின்(india) பஞ்சாப்(punjab) மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
12 வகுப்பு படிக்கும் லக்ஸ்மி என்ற மாணவி தனது சகோதரியுடன் வீட்டுக்கு சாலையில் நடந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் லக்ஸ்மியின் கைபேசியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் தனது கைபேசியை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லக்ஸ்மி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார்.
வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடிய மாணவி
லக்ஸ்மியின் கையை பிடித்தபடி அந்த சாலையில் 350 மீட்டர்களுக்கு தரதரவென இழுத்துசென்ற அவர்கள் கடைசியாக அந்த செல்போனை பறித்துக் கொண்டனர்.
சிறிதுதூரம் சென்ற பின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களின் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்த லக்ஸ்மியை பார்த்து மன்னித்து விடு என்று சொல்லிவிட்டு செல்போனுடன் அங்கிருந்து மற்ற இருவருடன் சென்றுள்ளான்.
கொள்ளையர்கள் கைது
லக்ஸ்மி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த லக்ஸ்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.
லக்ஸ்மியின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து அந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடிய காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.