பற்றியெரியும் காட்டுத் தீ – மக்கள் வெளியேற அவசர நிலை பிரகடனம்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 105 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப் பகுதி உள்ளது. இங்கு திடீரென பற்றிய தீ வேகமாக பரவி வருகிறது.
70 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக 35,000 குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் 600 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவசர நிலை பிரகடனம்
இதில் 3 வீரர்கள் தீக்காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தீ பரவும் பகுதியின் அருகேயுள்ள மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இங்கு 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. 1877க்கு பிறகு 3வது முறை அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு காரணமாக வெப்பநிலை அதிகரிப்புதான் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.