நீரிழிவு நோய்க்கு வேப்பிலை சிறந்ததா? இனி கவலையே பட வேண்டாம்
வேப்பிலை சர்க்கரை நோயை விரட்டும் தன்மை கொண்டதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது.
இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்துகள் உதவி செய்கின்றது.
உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் ஏற்படுகின்றது. ஓரளவிற்கு நமது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோய் குறித்த கவலை நாம் கொள்ள தேவையில்லை.
ஆனால் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை நீங்கள் சாப்பிடுவதை விட, பணம் செலவு செய்யாமல் இயற்கையாக கிடைக்கும் வேப்பிலையை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் போதுமாம்.
வேப்பிலை
வேப்ப மரத்தில் உள்ள கொழுந்து இலைகளை தான் அதிக பலனை கொடுக்கின்றது என்பது தெரியவந்துள்ளது. அதாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கும், டைப் 2 நீரிழிவு நோய் தாக்கத்தினை குறைக்கவும் செய்கின்றது.
இவை நீரிழிவு நோய்க்கு மருந்து மட்டுமின்றி, உடலில் மற்ற பிரச்சனைக்கும் இது தீர்வு கொடுக்கின்றது. அதாவது வயிற்று கோளாறுகளை சரி செய்கின்றது.
வேப்பிலை சாறு அருந்துவதால் தோல் பராமரிக்கப்படுவதுடன், உடம்பிலுள்ள நச்சுக்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக மாற்றுகின்றது.
வேப்பிலையில் உள்ள நிம்பின், நிம்பினின், ஜெடூனின் போன்றவை சர்க்கரை நோய்க்கு எதிராக போராடக்கூடியவை. கல்லீரல் நன்கு இயங்கவும் வேப்பிலை பயன்படுகின்றது.
காயத்தை எளிதில் குணப்படுத்தும் தன்மை கொண்ட வேப்பிலையை நீரிழிவு நோயாளிகள் ஏதேனும் புண்களால் அவதிப்பட்டால் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
எப்படி சாப்பிடலாம்?
வேப்பிலையை காலையில் எழுந்த பின்பு, பல்துலக்கிவிட்டு, வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீருடன் சாப்பிடுவது சிறந்த பலனை அளிக்கும்.
கசப்பு தன்மையால் அப்படியே சாப்பிடுவதற்கு கஷ்டப்படுபவர்கள், அதனை அரைத்து சாறாக அருந்தலாம். அவ்வாறு இல்லையெனில் வேப்ப எண்ணெய்யை நாக்கில்படாமல் விழுங்கினால் முழுபலனை பெறலாம்.
இதுவும் உங்களுக்கு கடினமாக இருந்தால் வேப்பிலையை நிழலில் உலர வைத்து பொடி செய்து, வெந்நீரில் அவ்வப்போது கலந்து தேநீரில் அருந்தலாம்.
ஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு சாப்பிடவும்.