;
Athirady Tamil News

உயிரிழந்த குழந்தைக்கு 40 நிமிடங்கள் சிகிச்சை- ரமணா பட பாணியில் சென்னையில் நடந்த அவலம்!

0

சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைக்கு 40 நிமிடங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
சென்னையில் சுகுமார் என்பவர் ஒருவரது வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். முதலாளியின் வீட்டிலேயே குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். டிரைவர் சுகுமாரின் 3 வயதுக் குழந்தை எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் விழுந்துள்ளது.

இதனைப் பார்த்த பெற்றோர் தங்கள் குழந்தையை மீட்டு ஈஞ்சம்பாக்கம் நகர்ப்புறச் சமூக நல மையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது குழந்தைக்கு சிபிஆர் (Cardiopulmonary Resuscitation) எனப்படும் முதலுதவி சிகிச்சையை 40 நிமிடங்கள் மட்டும் செய்தனர்.

பிறகு குழந்தையை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூறியுள்ளனர். இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

40 நிமிடங்கள் சிகிச்சை
இந்த சம்பவம் செப். 2ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுகையில் நகர்ப்புறச் சமூக நல மையத்தில் சிகிச்சை அளிக்கவில்லை.

அவசரச் சிகிச்சைக்கு உரிய உபகரணங்கள் இல்லை என்று முன்பே கூறியிருந்தால் நாங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்போம். இதற்கு ஆம்புலன்ஸ் கூட தரவில்லை. கேட்டால் ரிப்பேர் எனச் சொல்லிவிட்டார் தாக ஊழியர்கள் தெரிவித்தாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.