;
Athirady Tamil News

no parking board – வீட்டு வாசலில் வைத்தால்…தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

0

வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் விதமாக அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு அல்லது தடுப்புகள் வைப்பத்துடன், பூந்தொட்டிகளையும் வைத்துள்ளதாகவும், பல குற்றசாட்டுகள் எழுந்தது.

இது குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, இது போன்ற போர்டுகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் வீட்டு வாசலின் முன்பு

வீட்டு வாசலில்..
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள பல வீடுகளின் கதவுகளில் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

ஆனால் சில விளம்பரதாரர்கள் வீடுகளின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறாமல் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகையை வைத்துவிட்டு அதில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தையும் வைத்து விடுகின்றனர்.

அதுவே வீட்டின் உரிமையாளர் தங்கள் வீட்டிற்கு பார்க்கிங் என்பது தொல்லையாக இருந்தால் அவர் வைப்பது என்பது வேறு, ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தினர் வீட்டில் உரிமையாளரிடம் எந்தவித அனுமதியும்

பெறாமல் நோ பார்க்கிங் விளம்பரத்தை ஒட்டி அதன் நிறுவனத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்வது குறித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.