ஜேர்மனியில் நேற்று அதிகாலைவேளை இடம்பெற்ற அனர்த்தம் : போக்குவரத்தில் பெரும் குழப்பம்
ஜேர்மனியில்(germany) நேற்று (11)அதிகாலைவேளை பிரதான பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஜெர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகர மையத்தில் எல்பே ஆற்றைக் கடக்கும் நான்கு பாலங்களில் ஒன்றான கரோலா பாலமே, இன்று அதிகாலைவேளை இடிந்து ஆற்றினுள்ளே விழுந்தது.
போக்குவரத்தில் பெரும் குழப்பம்
இந்த சம்பவம், அதிகாலையில் நிகழ்ந்தமையால், பாலத்தில் எவருமில்லாத காரணத்தால், யாரும் காயமடையவில்லை. எனினும், இந்த விபத்தால், போக்குவரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முழு பாலமும் அவசரமாக மூடப்பட்டதால், நகரில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுநர்கள் டிரெஸ்டனின் ஓல்ட் டவுன் மற்றும் நியூ டவுன் இடையே பயணிக்கின்றனர்.
படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சரக்குக் கப்பல்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் கப்பல்களும் பாதிப்படைந்துள்ளன.
கடுமையான ஆபத்து ஏற்படலாம்
அத்துடன் இரண்டு பெரிய மாவட்டங்களின் குழாய்கள் வெடித்ததால், மாநிலத் தலைநகரான டிரெஸ்டனில் சூடான நீர் வழங்கல் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாலத்தைச் சுற்றியுள்ள நெருக்கமான தெருக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே இடிந்ததால், மீதமுள்ள பகுதியும் இடியும் அபாயம் உள்ளதால், கடுமையான ஆபத்து ஏற்படலாம் என்று தீயணைப்பு படை செய்தித் தொடர்பாளர் மைக்கேல் கிளாரே தெரிவித்தார்.
எனினும் பாலம் இடிந்து விழுந்த விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.