கனேடிய அரசின் அதிரடி தீர்மானம்: வெளிநாடு ஒன்றுக்கான 30 அனுமதிகள் ரத்து
இஸ்ரேலுக்கு (Israel) ஆயுத விற்பனைக்கான 30 அனுமதிகளை கனடா (Canada) இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பை கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) நேற்றையதினம் (11) வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, கியூபெக்கில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை இஸ்ரேலிய இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய வெடிமருந்துகள்
இதன் போது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜெனரல் டைனமிக்ஸின் கனடியப் பிரிவால் தயாரிக்கப்பட்ட கனேடிய வெடிமருந்துகளை – இஸ்ரேலுக்கு மறுவிற்பனை செய்வதற்காக மற்ற நாடுகளுக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜோலி கூறியுள்ளார்.
கனேடிய ஆயுதங்கள், இஸ்ரேலில் விற்பனைக்கு செல்லும் ஒரு நாட்டிலிருந்து விற்பது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளதாகவும், ஜெனரல் டைனமிக்ஸ் போன்ற வணிகப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.