;
Athirady Tamil News

Parent Visa வழங்கும் முக்கியமான 5 நாடுகள்., பட்டியலில் கனடா, பிரித்தானியா…

0

பல நாடுகள் குடியுரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கு, விசா வழங்கி, தங்களுடன் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.

பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கியமான 5 நாடுகள் இதோ.,

1. அவுஸ்திரேலியா (Ausralia)
அவுஸ்திரேலியா பெற்றோருக்கான இரண்டு வகை விசாக்களை வழங்குகிறது.

Contributory Parent Visa: இது விலை உயர்ந்ததாக இருக்கும், ஆனால் செயல்படுத்தும் நேரம் குறைவாக இருக்கும்.

Non-Contributory Parent Visa: இது சற்று குறைந்த செலவில் இருக்கும், ஆனால் செயல்படுத்தும் நேரம் நீண்டதாக இருக்கும்.

2. கனடா (Canada)

கனடா “Parent and Grandparent Super Visa” எனும் விசாவை வழங்குகிறது. இது பெற்றோர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கனடாவில் தங்க அனுமதி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு முறை 2 ½ ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக தங்க முடியும்.

3. நியூசிலாந்து (New Zealand)

நியூசிலாந்தில் “Parent Resident Visa” வழங்கப்படுகிறது. இதில், குடியுரிமை பெற்றவர் அல்லது நிரந்தர குடியுரிமையாளர் தங்கள் பெற்றோரை கொண்டு வர அனுமதி பெறுவர். பிள்ளையின் நிதி நிலைமையின் அடிப்படையில் பெற்றோர் விசா வழங்கப்படும்.

4. பிரித்தானியா (United Kingdom)
பிரித்தானியாவில், “Parent of a British Child Visa” அல்லது “Elderly Dependent Visa” வழங்கப்படுகிறது. இதில் பெற்றோர் அல்லது பெரியவராக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் குழந்தைகளின் அருகில் இருப்பதற்கான விசாவை பெற முடியும்.

5. ஜேர்மனி (Germany)
ஜேர்மனியில் “Family Reunification Visa” மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியும். இவ்விசா பெறுவதற்கு குழந்தைகள் ஜேர்மனியில் வசித்து வேலை செய்வதாக இருக்க வேண்டும்.

இந்த விசாக்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் சேர்ந்து வாழ உதவுகின்றன, மேலும் குடும்ப உறவை மேம்படுத்துகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.