;
Athirady Tamil News

பொன். சிவபாலனின் 26வது நினைவு தினம்

0

யாழ். மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான அமரர். பொன். சிவபாலனின் 26 ஆவது வருட நினைவு நாள் நேற்றைய தினம் புதன்கிழமை அன்னாரது சித்தங்கேணி இல்லத்தில் நடைபெற்றது.

குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலின்போது திருவுருப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்களும் யாழ்.மாநகர சபையின் முன்னைநாள் உறுப்பினர் த.முகுந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ். மாநகரசபையில் மாநகர போக்குவரத்து சம்பந்தமான உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன் கொல்லப்பட்டார்.

அவருடன் யாழ். நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ் பொலிஸ் அத்தியடசகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையக பொலிஸ் அதிகாரி மோகனதாஸ், யாழ். நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.