வாக்களிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல்கலைக்கழக மாணவர்களால் முறைப்பாடு
ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டினை பெ்ரல் (PAFRAL) அமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கல்வி நடவடிக்கைகள்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20), நாள் முழுவதும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதால் தூரப்பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்கள் இந்த பிரச்சினையை எதிர்நோக்குவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம், ருஹுணு மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று வாக்களிக்கும் வாய்ப்பை இழந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.