;
Athirady Tamil News

ஏவுகணைகளுடன் ரஷ்யா வந்த சரக்குக் கப்பல்: வெளியான ஆதாரங்கள்

0

ஈரான் (Iran) தனது ஏவுகணைகளை (ballistic missiles) ரஷ்யாவிற்கு (Russia) அனுப்பியதைத் தெளிவுபடுத்தும் புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியிடப்பட்டுள்ளது.

Maxar Technologies நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்களில், செப்டம்பர் 4 அன்று ரஷ்யாவின் Astrakhan பகுதியில் உள்ள போர்ட் ஒல்யா துறைமுகத்தில் இந்த கப்பல் இருந்ததை உறுதிசெய்துள்ளது.

பாதுகாப்பு கூட்டாண்மை
இந்த ஏவுகணைகள் உக்ரைனில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்ததுள்ளது.

ஈரான் மற்றும் ரஷ்யா இடையேயான பாதுகாப்பு கூட்டாண்மை வளர்ச்சியடைந்து வருவதைக் காட்டும் இந்த செயல்பாடு, உக்ரைனில் நடக்கும் போரின் மிகப்பாரிய படிநிலையாகக் கருதப்படுகிறது.

இந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு மிகப்பாரிய ஆபத்தை உருவாக்குவதுடன், 2023 இறுதியில் ஈரான் – ரஷ்யா (Russia) இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வழங்கப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.