கனடாவில் மீன் வலையில் சிக்கி தவித்த திமிங்கலம்: 4 நாள் மீட்புக்கு பிறகு விடுவிப்பு
வலையில் சிக்கிய திமிங்கலம் நான்கு நாட்கள் நடந்த மீட்பு பணிகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட திமிங்கலம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் மீன் வலையில் சிக்கிய ஹம்ப்பேக் திமிங்கலம் ஒன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மீன் வலை கயிறுகள் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு சுமார் 11மீ(36 அடி) நீளம் கொண்ட ஹம்ப்பேக் திமிங்கலம் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
4 நாட்கள் நடந்த மீட்பு நடவடிக்கைக்கு பிறகு திமிங்கலம் பத்திரமாக விடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளின் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கனடாவின் மீன்வளம் மற்றும் பெருங்கடல்களின் கடல் பாலூட்டி ஒருங்கிணைப்பாளர் தகவல் படி, பாதிக்கப்பட்ட திமிங்கலம் பல மாதங்களாக மீன் வலையில் சிக்கி கொண்டு இருந்து இருக்கலாம் என்றும், யாரும் கவனிக்காமல் இருந்து இருந்தால் திமிங்கலம் சோகமான முடிவை எதிர் கொண்டு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.