;
Athirady Tamil News

2001ல் உலக வர்த்தக மையம் மீது நடந்த தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய பிரபலங்கள்

0

செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட மிக மோசமான விமானத் தாக்குதலில் பிரபலங்கள் பலர் கடைசி நொடியில் உயிர் தப்பியுள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன்
செப்டம்பர் தாக்குதலின் போது உயிர் தப்பிய பலர், தாக்குதலுக்கு இலக்கான உலக வர்த்தக மையம் அல்லது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த விமானங்களில் பயணப்பட வேண்டியவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.

அதில் முக்கியமான ஒருவர் பாப்பிசை மன்னர் மைக்கேல் ஜாக்சன். 2001 செப்டம்பர் 11ம் திகதி பகல் உலக வர்த்தக மையத்தில் மைக்கேல் ஜாக்சனுடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், அதன் முந்தைய நாள் தாயாருடன் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்ததாலும், தூக்கத்தில் இருந்து எழ தாமதமானதாலும் மைக்கேல் ஜாக்சனால் அந்த சந்திப்புக்கு செல்ல முடியாமல் போனது என்றே அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

இதேப் போன்று, Mark Wahlberg என்ற பிரபலமான நடிகரும் உயிர் தப்பியுள்ளார். உலக வர்த்தக மையம் மீது முதலில் மோதிய பயணிகள் விமானத்தில் தனது பிள்ளைகளுடன் அன்று பயணப்பட வேண்டியவர் Mark Wahlberg.

ஆனால் எதிர்பாராத காரணங்களால் அன்று அவரால் பயணம் தாமதமாகியுள்ளது. இதனால் அவரும் உயிர் தப்பியுள்ளார். இன்னொருவர் மிகப்பிரபலமான Family Guy தொலைக்காட்சி நாடகத்தை உருவாக்கிய Seth MacFarlane.

இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி
சம்பவத்தன்று விமான நிலையத்தில் தூங்கிப் போனதால் விமானத்தை தவறவிட்டுள்ளார். சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் கண்விழித்தவர், அந்த தாக்குதல் செய்தி அறிந்து ஸ்தம்பித்துப் போனதாக குறிப்பிட்டிருந்தார்.

இன்னொருவர் இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான Sarah Ferguson. அந்த இரட்டை கோபுரங்களில் ஒன்றில், 101வது தளத்தில் இவருக்கு அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

ஆனால் சம்பவத்தின் போது Sarah Ferguson அவரது அலுவலகத்தில் இல்லை, நேர்காணல் ஒன்றிற்காக வெளியே சென்றுள்ளார். 2018ல் நடந்த விழா ஒன்றில், தொடர்புடைய சம்பவத்திற்கு பின்னர் தமது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பது குறித்து அவர் விரிவாக பேசியிருந்தார்.

1996ல் Sarah Ferguson இளவரசர் ஆண்ட்ரூவை விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.