சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் விற்பனை கண்காட்சி
கிண்டர்நோத்ஹில்(KNH) நிறுவனத்தின் நிதியுதவியுடன், சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தினால் ஏற்பாட்டில் விற்பனை கண்காட்சி இன்று(13) நடைபெற்றது.
“வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் காலை 8.30மணிக்கு ஆரம்பமானது.
குறித்த விற்பனை கண்காட்சியினை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
சுய உதவிக் குழு பெண்களை வலுப்படுத்தும் நோக்கில், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை சுமார் 40 விற்பனை கூடாரங்கள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், குறித்த விற்பனை கண்காட்சி இன்று மாலை 5.00மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பனை அபிவிருத்திச் சபை முகாமையாளர் பார்த்தீபன், சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் திட்ட முகாமையாளர் கமலேஸ்வரி, திட்ட இணைப்பாளர் ரஜீமா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி, துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.