;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விண்வெளியிலிருந்து வாக்களிக்கவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

0

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் (Butch Wilmore) வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளியில் இருந்த படி வாக்களிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் (United States) – புளோரிடா (Florida) மாகாணத்தில் இருந்து, ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் ஜூன் 05ஆம் திகதி சர்வதேச விண்வெளி சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் விண்வெளியில் இருந்தபடி ஊடகவியலாளர் சந்திப்போன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

அதில், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளோம். இது எங்களின் முக்கியமான கடமையாகும்.

எனவே தேர்தல் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இதில் கமலா ஹாரிஸ் (Kamala Harris), டிரம்ப் (Donald Trump) இதில் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.