கோடி கணக்கில் ஏலம் போன விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) எழுதிய கடிதத்தின் நகல் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிராங்களின் டி ரூஸ்வெல்ட்டுக்கு (Franklin D. Roosevelt) எழுதிய கடிதமே இவ்வாறு ஏலம் போயுள்ளது.
அணு ஆயுத உற்பத்தி
இந்த கடிதம் அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், பல மனித உயிர்கள் பறிபோக இந்த கடிதம் காரணமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நகல் கடிதம் ஏலம் போவதற்கு முன்னர், ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கும் அவர் எழுதிய கடவுள் கடிதம் ரூ.20 கோடிக்கும் ஏலம் போனது.
நியூயோர்க்கில் உள்ள பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நூலகத்தில் ஐன்ஸ்டீனின் எழுதிய அசல் கடிதம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.